இரு குறுங்கதைகள்


ஓப்பன் டிக்கெட்

‘பையன் , சின்னப் பையங்க…’

10வது பொதுத் தேர்வு எழுத முடியாமல் போகும் அபாயம் இருந்தது. தனது பிறப்புச் சான்றிதழைத் திருத்தி அமைத்துக் கொண்டான் ரெட்டி.

வினோதமாக அன்றிலிருந்து அவன் திருத்தப்பட்ட தேதியிலேயே தன் பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினான்.

தன் 28ஆம் அகவை நெருங்கவே , சொந்தத்தில் மணப்பெண் தேடிக்கொண்டான். 8 மாதம் , அமேரிக்காவிலிருந்து , தொலைப்பேசியில் பேசித் தீர்த்தான்.

தன் விருப்பத்தை முதலில் அவன் தொலைப்பேசி மூலமே அப்பெண்ணிற்கு தெரிவித்தான்.

‘நச்சிந்தா’ என சில முறைக் கேட்டு அவள் விருப்பத்தையும் அறிந்து கொண்டான்.

ஊரில் அண்ணன் , சின்ன அண்ணன் என அனைவரும் திருமணமாகி குழந்தையுடனும் மனைவியுடனும் வாழ்ந்துவருகிறார்கள் என அடிக்கடிக் குறிப்பிடுவான்.

தன் திருமணத்திற்காக 5 வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டான். கொண்டாடப் போவதாக அறிவித்தான்.

அமேரிக்காவிற்கு புது மனைவியை அழைத்து வந்தான். ஏதோ நல்ல தள்ளுபடியில் டிக்கெட் கிடைத்தது என்றான். $300 மிச்சமாம்.

உபரி விவரமாக , 6 மாதம் வரை இதே டிக்கெட் கொண்டு பைசா செலவில்லாமல் இந்தியா திரும்பிச் செல்லலாம் என்றான்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் மனைவியும் இந்தியா திரும்பினாள். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படிக்கப் போகிறாள் எனக் கேள்வி !

Advertisements

About karamkaapi

பொழுது போக எழுதுகிறேன்... பொழுது போகமல் இருக்க எழுதுகிறேன்...
This entry was posted in very short story (tamil) and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to இரு குறுங்கதைகள்

 1. J.P.Noble says:

  A good written wel lwritten story. Keep writing. Saanthan, a Srilankan writer is famous for writing kurunkathaihal

 2. J.P.Noble says:

  I like this also. Keep writing.

 3. karamkaapi says:

  Thank you Sir. Your kind words are encouraging.

 4. ushabaloo says:

  A mild satire on people setting up their lives on falsehood and how it infects others too; a petite piece

 5. Kamala says:

  Well written one page story. Keep doing it.

 6. karamkaapi says:

  Thanks for the encouragement! There are 2 stories in this post, I hope you were able to read both of them.

Comments are closed.